Posts in அன்றன்றுள்ள அப்பம்
ஏற்றுக்கொண்டார்!

"மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்" (ஏசாயா 53:4).

இந்த உலகம் பாடுகள் நிறைந்த உலகம்தான். பாடுகளும், துக்கங்களும் நிறைந்த இந்த உலகத்திலே ஆண்டவர் உங்களுடைய அருகிலே வந்து, "மகனே நீ பட்ட பாடுகள் போதும். அதை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். நீ துக்கத்தோடு நடந்த காலங்கள் போதும். அந்த துக்கங்களை நான் சுமக்கும்படி என்னிடத்தில் விட்டுவிடு" என்று சொல்லுகிறார்.

Read More
ஏதேனைப் போல!

"கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப் போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்" (ஏசா. 51:3).

கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் செய்வார். உங்கள் வனாந்தரமான வாழ்க்கையை ஏதேன் தோட்டத்தைப்போல மறுரூபமாக்குவார். இது கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற வாக்குத்தத்தம்.

Read More
ஏறெடுங்கள்!

"உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்" (ஏசா. 40:26).

வானத்திற்கு நேராய் உங்களுடைய கண்களை ஏறெடுக்கும்போது, உங்கள் உள்ளம் கர்த்தரைக் குறித்து தியானிக்கும். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் உங்களுக்கு ஒத்தாசை அனுப்புவார் என்ற நம்பிக்கை ஏற்படும்.

Read More
ஏழைக்கு இரங்குகிறவன்!

"ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்" (நீதி. 19:17).

ஏழைக்கும், கர்த்தருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இரக்கத்தின் தேவன், ஏழைகளுக்குச் கொடுக்கப்படுவதை தனக்கே கொடுக்கப்பட்டதாக எண்ணுகிறார். ஏழைக்கு இரங்கி கொடுப்பது, அவருக்குக் கொடுப்பதற்கே சமானம்.

Read More
ஏறெடுக்கிறேன்!

"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" (சங். 121:1).

"என் கண்களை ஏறெடுக்கிறேன்!" என்று தாவீது ராஜா எத்தனை அருமையாய் கூறுகிறார் பாருங்கள். உங்களுடைய கண்கள் பரிசுத்தமுள்ள தேவனை நோக்கிப் பார்க்கும்போது அவரிடமிருந்து பரலோக நன்மைகளும், கிருபைகளும், ஒத்தாசைகளும், ஆசீர்வாதங்களும் உங்களை நோக்கிக் கடந்து வரும்.

Read More
என்றென்றும் காப்பார்!

"வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர்" (யூதா 24).

போதகர்கள் ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் இந்த வசனத்தை சபையாருக்கு ஆசீர்வாதமாகக் கூறுவார்கள். விசுவாசிகள் விசுவாசத்தோடும், உற்சாகத்தோடும் செல்லுவதற்கு இந்த ஆசீர்வாதம் மிகவும் அவசியமாயிருக்கிறது. உங்கள் ஆவிக்குரிய ஜீவியம் வழுவாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், நீங்கள் உங்களை காக்கிறவருக்கு முற்றிலுமாய் அர்ப்பணிக்க வேண்டும். தன்னிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் பாதுகாத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார்.

Read More
எந்த நிலைமையிலும்!

"நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்" (பிலி. 4:11,12).

கர்த்தர் ஒரு மனுஷனுக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்களில் மிக இனிமையான பாடம், எந்த நிலைமையிலும், மனரம்மியமாயிருப்பதேயாகும். திடீரென்று துன்பங்கள் சூழ்ந்து கொள்ளும்போது, அந்த சூழ்நிலைக்கு காரணங்கள் கர்த்தருடைய கோபாக்கினையோ, சாபமோ, பாவத்தின் விளைவோ என்று எண்ணி கலங்குகிறார்கள். அப்படியல்ல. எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாகவே செய்தருளுகிற தேவன் எந்தச் சூழ்நிலையிலும் மனரம்மியமாயிருக்கும்படி உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார் என்றே நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Read More
எண்ணங்களில் வரும் போராட்டம்!

"...எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்" (2 கொரி. 10:5).

உங்களுடைய வாழ்க்கையின் போர்க்களம் உங்களுடைய எண்ணத்தில்தான் இருக்கிறது. அப். பவுல், "எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்கணை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்" (2 கொரி. 10:4,5) என்று சொல்லுகிறார்.

Read More
எழுந்திருப்பார்கள்!

"...மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்" (1 கொரி. 15:52).

கர்த்தருடைய வருகையின் நாள் மிகப் பெரிய சந்திப்பின் நாள். அந்நாளில் கிறிஸ்துவை நீங்கள் முகமுகமாய் சந்திப்பீர்கள். கர்த்தருக்குள் மரித்த உங்களுடைய அருமையானவர்களையும் மகிழ்ச்சியுடன் சந்திப்பீர்கள். அழிவுள்ளதாய் விதைக்கப்பட்டவர்கள் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். சாவுக்கேதுவாய் அடக்கம் செய்யப்பட்டவர்கள் சாவாமையைத் தரித்துக் கொண்டு எழுந்திருப்பார்கள். மரணம் ஜெயமாய் விழுங்கப்படும்.

Read More
எடுபட முடியாத சந்தோஷம்!

"...அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்" (யோவா. 16:22).

எடுபடக் கூடிய சந்தோஷமுமுண்டு. எடுபடாத சந்தோஷமுமுண்டு. சிலருக்கு கை நிறைய பணம் இருக்கும்போது சந்தோஷமாயிருக்கும். பணமெல்லாம் கரைந்து வெறுமையாகிவிடும்போது அந்த சந்தோஷம் எடுபட்டு போகும். சிலருக்கு குடிக்கும்போது ஒரு சந்தோஷம் உண்டாகும். போதை தெளியும்போது அந்த சந்தோஷம் எடுபட்டு போகும். உலக சந்தோஷங்கள் அனைத்துமே தற்காலிகமானவை. அவைகள் மிக வேகமாக எடுபட்டு போகக்கூடியவை.

Read More
என்னுடைய சமாதானத்தை!

"சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்" (யோவா. 14:27).

"என்னுடைய சமாதானத்தையே" என்று கர்த்தர் அழுத்தமும், திருத்தமுமாய் கூறுகிறார். மற்றவர்கள் கொடுக்கும் சமாதானம் அற்பமும், சொற்பமுமாயிருக்கும். கொஞ்சக்காலத்தில் கரைந்து, மறைந்து போகும். ஆனால் கிறிஸ்துவினுடைய சமாதானமோ என்றென்றுமாய், பூரணமாய் நிலைத்து நிற்கும்.

Read More
என் பின்னே வாருங்கள்!

"எனக்குப் பின் சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்" (மாற்கு 2:14).

முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நாட்களில் மரித்தவர்களும், காயப்பட்டவர்களும் மிகப்பெரிய எண்ணிக்கையிலிருந்தார்கள். ஏறக்குறைய ஒரு கோடி வீரர்கள் முதல் உலக மகா யுத்தத்தில் மரித்திருப்பார்கள் என்றும், இரண்டு கோடி சாதாரணமான மக்கள் பலியாகியிருப்பார்கள் என்றும் கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

Read More
எது எளிது?

"உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?" (மாற். 2:9).

இயேசுகிறிஸ்து, ‘உங்களுடைய வாழ்க்கையிலிருக்கும் தீராத வியாதியை நான் குணமாக்குவது எளிதான காரியமா அல்லது இந்த பிரச்சனைக்கும், வியாதிக்கும் காரணமாயிருக்கிற பாவங்களை மன்னிப்பது எளிதான காரியமா, எது எளிது’ என்று கேட்கிறார்.

Read More
எதை வெளிப்படுத்துகிறாய்?

"சற்று நேரத்துக்குப் பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்" (மத். 26:73)

ஒரு மனிதனுடைய இருதயத்தின் தன்மையை அவனது கண்களும், அவனது வார்த்தைகளும் வெளிப்படுத்துகின்றன. நீங்கள் அறிந்தோ, அறியாமலோ பலவிதங்களிலே உங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறீர்கள்.

Read More
எல்லாம் இயேசுவே!

"அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் இயேசுவைத் தவிர வேறொருவரையும் காணவில்லை" (மத். 17:8).

இயேசு தம்முடைய சீஷர்களாகிய பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் கூட்டிக்கொண்டு உயர்ந்த மலைக்குப் போனார். அங்கே அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவருடைய முகம் சூரியனைப்போல பிரகாசித்தது. அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.

Read More
என் ஜெயக்கொடி!

"என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே" (உன். 2:4).

ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு கொடி உண்டு. அதிலுள்ள ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு அர்த்தமுண்டு. அதில் தரிப்பிக்கப்படுகிற சின்னங்களுக்கும் காரணங்களுண்டு.

Read More
என் பிரியமே!

"என் பிரியமே! என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்" (உன். 4:7,9).

நீங்கள் கர்த்தருடைய சமுகத்திலே வாஞ்சையோடு அமர்ந்திருக்கும்போது, கர்த்தர் உங்களைப் பார்த்து "என் பிரியமே! நீ என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்" என்று அன்பாய் சொன்னால் அது உங்களுக்கு எத்தனை ஆனந்தமாயிருக்கும்! உங்கள் ஆத்தும நேசர் உங்களை அவ்விதமாய் அழைப்பதற்கேற்றவாறு ஒரு நல்ல ஜெப ஜீவியம் ஜீவிக்க தீர்மானியுங்கள்.

Read More
என்னை நோக்கிக் கூப்பிடு!

"என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" (எரே. 33:3).

உலகத்தில் தேவனை நோக்கிக் கூப்பிடும்படியான சந்தர்ப்பங்கள் பல உண்டு. ஒரு மனுஷனுடைய பாவமும், அக்கிரமமும்கூட தேவ சந்நிதிவரைக்கும் எட்டுகிறது. அநியாயமாய் சிந்தப்படுகிற இரத்தம்கூட தேவனை நோக்கிக் கூப்பிடுகிறது. காயீன் ஆபேலை கொலைச் செய்தபோது, ஆபேலின் இரத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கி கூப்பிட்டது. கர்த்தர் அந்த சத்தத்தைக் கேட்டு பூமிக்கு இறங்கி வந்தார்.

Read More
எந்த ஆயுதமும்!

"உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்" (ஏசா. 54:17).

கர்த்தருடைய வாக்குத்தத்தங்களில் இனிமையான ஆசீர்வாதங்களைக் கொண்டவைகளுமுண்டு. சத்துருவை தாக்கி வீழ்த்தும் பட்டயம் போன்றவைகளுமுண்டு. தீயோன் எயும் அம்புகளிலிருந்து பாதுகாக்கும் கேடகம் போன்ற வாக்குத்தத்தங்களுமுண்டு.

Read More
என் ஜனங்களோ!

"ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணி முடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்" (எரே. 2:32).

"நான் என் ஜனங்களை மறக்கவில்லை; ஆனால் என் ஜனங்களோ என்னை மறந்துவிட்டார்கள்" என்று கர்த்தர் துக்கத்துடன் சொல்லுகிறார். அவர் அன்புள்ளவராய் இருப்பதுடன், உங்களுடைய அன்புக்காக ஏங்கி அவர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.

Read More