Posts in அன்றன்றுள்ள அப்பம்
நிழலில் தங்குவான்!

"உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான்" (சங். 91:1).

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும். கிறிஸ்துவின் அடைக்கலத்தின் மேன்மை ஆபத்துக்காலத்தில் அதை ருசித்தவர்களுக்குத்தான் தெரியும். ஆம், அவர் எத்தனை அருமையாய் உங்கள்மேல் அன்பு பாராட்டி, தம்முடைய நிழலிலே மகிழ்விக்கிறார்!

Read More
ஆண்டவரின் பிரியம்!

"எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக" (சங். 90:17).

தேவமனுஷனாகிய மோசேயின் ஜெபம் சங்கீத புஸ்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. 90-ம் சங்கீதத்தின் கடைசி பகுதியில், மோசே, "எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக" என்று உள்ளம் உருகி ஜெபிக்கிறார்.

Read More
கிருபையில் திருப்தி!

"நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்" (சங். 90:14).

தேவன் உங்களுக்கு அளிக்கும் கிருபையிலே திருப்தியாயிருங்கள். அப்பொழுது உங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்து களிகூருவீர்கள். அதிகாலையில் பனித்துளியானது பசும் புல்லில் மென்மையாக இறங்குவது போல் தேவ கிருபை ஒவ்வொரு நாளும் உங்கள்மேல் அருமையாய் இறங்கும். தேவ கிருபையை ருசித்த எரேமியா, "அவைகள் காலைதோறும் புதியவைகள்" (புல. 3:23) என்று மகிழ்ச்சியோடு எழுதுகிறார்.

Read More
மோசேயின் ஜெபம்!

"ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்" (சங். 90:1).

90-ம் சங்கீதம் ‘மோசேயின் ஜெபம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜெபத்திலே மோசே கர்த்தர் மேலுள்ள தன் அன்பை வெளிப்படுத்துகிறார். மட்டுமல்ல, கர்த்தரோடுள்ள ஆழமான உறவையும், கர்த்தரைப் போற்றித் துதிக்கும் துதியையும், மனந்திறந்து அவரிடத்தில் ஏறெடுக்கும் விண்ணப்பங்களையும் இந்த ஜெபத்தில் பார்க்கலாம்.

Read More
பரலோக மன்னா!

"தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்" (சங். 78:25).

கர்த்தர் தூதர்களின் அப்பத்தை எடுத்து, இஸ்ரவேலருக்கு அப்பமாகக் கொடுத்தார். இரண்டுபேரின் உணவையும் ஒரே உணவாய் மாற்றிவிட்டார். அப்படியானால், இந்த மன்னா எப்படிப்பட்டது? மன்னாவை புசிக்க வேண்டுமென்றால் நீங்கள் எப்படிப்பட்டவர்களாயிருக்க வேண்டும்? தூதர்களுடைய மன்னா என்பது கர்த்தருடைய சமுகம்தான். வேதம் சொல்லுகிறது, "இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்" (மத். 18:10).

Read More
வல்லமையை விளங்கப்பண்ணுதல்!

"அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணினீர்" (சங். 77:14).

மனுஷன் தேவனை மறந்து, தன்னுடைய சுய வல்லமையைப் பிரஸ்தாபப்படுத்த எண்ணுகிறான். தன் சுயபெலத்தினால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நினைக்கிறான். அதனால்தான் அவன் ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது. ஆதியிலே ஜனங்கள் தங்களுக்கு பேர், புகழ் உண்டாக்க, வானளாவும் சிகரமுள்ள பாபேல் கோபுரத்தைக் கட்ட முயற்சித்தார்கள். தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று எண்ணினார்கள். அப்போது கர்ததருடைய வல்லமை குறுக்கிட்டது. கர்த்தர் அவர்களுடைய பாஷைகளைத் தாறுமாறாக்கினார். அவர்கள் பூமியெங்கும் சிதறிப் போனார்கள் (ஆதி. 11:1-9).

Read More
தேவனுக்கு மகிமையுண்டாவதாக!

"...தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக" (சங். 70:4).

ராஜாக்களுக்கு என ஒரு மேன்மையுண்டு; ராஜாதி ராஜாவுக்கு என அதிகமான மகிமையுண்டு! உங்களால் கர்த்தர் மகிமைப்படுகிறாரா அல்லது தூஷிக்கப்படுகிறாரா?

Read More
குறுக்கு வழி உண்டா?

"ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு" (சங். 68:20).

"பரலோகத்திற்கு குறுக்கு வழி உண்டா?" என்று ஒரு முதியவர் கேட்டாராம். காரணம், அவர் வாழ்நாளெல்லாம் குறுக்கு வழிகளிலேயே சென்று பழக்கப்பட்டவர். அநேக ஜனங்கள் குறுக்கு வழியிலேயே பழக்கப்பட்டு நேர் வழிகளைக் குறித்து அறியாமலேயே இருக்கிறார்கள்.

Read More
பொய்!

"பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்" (சங். 63:11).

கர்த்தருடைய வேதம் பொய் பேசும் பழக்கத்தை வன்மையாய்க் கண்டிக்கிறது. ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் பொய் பேசியதால் வேதனையடைந்த அநேகருடைய வாழ்க்கை வரலாறுகள் எச்சரிப்பாய்க் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சிலர் பயத்தினால் பொய் பேசுகிறார்கள். சிலர் வேறு வழியின்றி பொய் பேசுகிறார்கள். இன்னும் சிலருக்கோ வாயைத் திறந்தாலே போதும், மடை திறந்த வெள்ளம்போல பொய் பாய்ந்துகொண்டேயிருக்கும்.

Read More
கழுவி சுத்திகரியும்!

"என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்" (சங். 51:2).

தாவீது தேவ சமுகத்திலே ஓடி வந்து, கர்த்தருடைய பாதத்தைக் கட்டியணைத்து, "தகப்பனே, உம்முடைய இரத்தம் என் மேல் விழட்டும். என்னுடைய அக்கிரமங்கள் நீங்க என்னைக் கழுவி, என் பாவங்களற என்னைச் சுத்திகரியும்" என்று கதறினார். நீங்கள் பரம தகப்பனிடம் மெய்யான மனஸ்தாபத்துடன் மனந்திரும்பி வரும்போது, எத்தனைமுறை வேண்டுமென்றாலும் மன்னிக்க கர்த்தர் கிருபையுள்ளவரா யிருக்கிறார். நீங்கள் சொந்த தகப்பனிடம் மனம் திறந்து பேசுவதைப்போல, கர்த்தரிடம்பேசி உங்களுடைய பாவங்களற கழுவப்படுங்கள்.

Read More
என்னை நோக்கிக் கூப்பிடு!

"ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்" (சங். 50:15).

"நான் உன்னை விடுவிப்பேன்" என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம். எந்த சூழ்நிலையானாலும், எந்த ஆபத்தானாலும் நான் உன்னை விடுவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவரை நோக்கி கூப்பிடுவதேயாகும்.

Read More
சேலா!

இந்த வசனத்தின் முடிவிலே "சேலா" என்ற ஒரு பதம் வருவதை சற்று கவனித்துப் பாருங்கள். "சேலா" என்னும் சொல் 40 சங்கீதங்களில் 71 முறையும், ஆபகூக் 3-ம் அதிகாரத்தில் 3 முறையும் காணப்படுகிறது. சேலா என்பது, அடைப்புக்குறிக்குள் போடப்பட்டிருப்பதினாலே அநேகர் அதை முக்கியமான வார்த்தையாக எண்ணுவதில்லை வேதாகமத்தின் பல புதிய பதிப்புகளிலும் இவ்வார்த்தை விடுபட்டுவிட்டது.

Read More
தாகமாயிருக்கிறேன்!

" மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங். 42:1).

தாவீது கர்த்தர் மேல் தான் வைத்த தாகத்தையும், வாஞ்சையையும் "மானுக்கு" ஒப்பிட்டு, "மான்கள் நீரோடையை வாஞ்சித்துக் கதறுவதைப்போல..., என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது" (சங். 42:2) என்று குறிப்பிடுகிறார்.

Read More
குணமாக்கும் ஆண்டவரே!

" கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும்" (சங். 41:4).

சரீர வியாதிகளைப் பார்க்கிலும் கொடிய வியாதி ஆத்துமாவைப் பற்றி பிடித்துக்கொண்டிருக்கும் வியாதி ஆகும். ஆத்துமாவிலே பாவ பழக்க வழக்கங்களுக்கு இடம் கொடுக்கிறபடியினால் அவைகள் உள்ளத்திலே நோய் கொண்டு நடைப்பிணங்களாய் திரிகின்றன. பல சரீர நோய்களுக்கு மூலக்காரணம் ஆத்துமாவிலுள்ள வியாதிதான்.

Read More
நினைவாயிருக்கிறார்!

"நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்" (சங். 40:17).

நினைப்பது என்பது வேறு. நினைவுபடுத்துவது என்பது வேறு. நினைவாகவேயிருப்பது என்பது வேறு. கர்த்தர் உங்கள் நினைவாகவேயிருப்பது உங்களுக்குக் கிடைத்த பாக்கியம் அல்லவா! தாவீது ஒருபக்கம் தன்னைப் பற்றியும், தன்னுடைய எளிய கோலத்தைப் பற்றியும் நினைக்கிறார். மறுபக்கத்தில் தன்மேல் நினைவாயிருக்கும் மகிமையின் ராஜாவை, ராஜாதி ராஜாவைக் குறித்து நினைக்கிறார். அவ்வளவு பெரிய தேவன் தன்மேல் நினைவாயிருக்கிறதை எண்ணியபோது அவருடைய உள்ளம் பரவசமடைந்தது.

Read More
நீரே என் நம்பிக்கை!

"இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை" (சங். 39:7).

உலகத்தாருக்கு எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையில்லை. விஞ்ஞானிகளிடம் போய் உலகத்திற்கு நம்பிக்கை உண்டா என்று கேட்டால், அவர்கள் ‘ஆகாய மண்டலத்திலே முழுவதும் புகையும் நச்சுக்காற்றும் பரவுவதால் நாம் சுவாசிக்கும் காற்று வேகமாக விஷமாக மாறி வருகிறது. தொழிற்சாலைகள் கக்கும் புகை, விமானங்கள் வெளியேற்றும் கரிப்புகை மனிதர்களுடைய வாழ்க்கையை சீர்குலைத்து, வியாதிகளை உண்டாக்கி வாழ்நாளை குறைத்துப்போடுகிறது’ என்கிறார்கள்.

Read More
வேஷம் வேண்டாம்!

"வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்" (சங். 39:6).

வீட்டில் ஒரு வேஷம்; வெளியில் ஒரு வேஷம்; ஆலயத்தில் ஒரு வேஷம்; இனத்தவர்கள் மத்தியில் இன்னொரு வேஷமாக செல்லுகிற மனுஷரைப் பார்க்கும்போது சங்கீதக்காரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. "வேஷமாகவே மனுஷன் திரிகிறான்" என்று தாவீது எழுதுகிறார்.

Read More
நீங்கலாக்கும்!

"மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்" (சங். 19:12,13).

மறைவான குற்றங்களைக் குறித்து கலங்கின தாவீது துணிகரமான பாவங்களுக்கும் தன்னை விலக்கிக் காக்கும்படி ஜெபிக்கிறார். கண்சாடையாய் விட்டுவிடுகிற மறைவான பாவங்கள் காலப்போக்கில் வளர்ந்து, மனசாட்சியை மழுக்கிக்கொண்டு துணிகரமான பாவத்திற்குள் கொண்டு செல்லுகிறது. துணிகரமான பாவத்தினாலே பெரும் பாதகங்கள், சாபங்கள், தேவகோபாக்கினைகள் குடும்பத்திற்குள் வந்து விடுகின்றன.

Read More