Posts in அன்றன்றுள்ள அப்பம்
பொறாமையோ!

பொறாமை எலும்புருக்கி என்றும் (நீதி. 14:30), அது புத்தி இல்லாதவனை அதம் பண்ணும் என்றும் (யோபு 5:2) வேதம் சொல்லுகிறது. ஆகவே பொறாமைக்கு உங்களை விலக்கிக் காத்துக்கொள்ளுங்கள்.

Read More
புத்தியுள்ள ஸ்திரீ!

ஒரு பெண்ணுக்கு எல்லாமே அவளது வீடுதான். வீட்டைக் கட்டியெழுப்ப வேண்டியது அவளுடைய தலையாயக் கடமையாகும். ஆண்களின் உலகம் பெரியது. அவர்களுக்கு வேலை, சம்பாத்தியம், நண்பர்கள் என்று பலதுறைகள் இருக்கும். ஆனால் வீட்டின் பொறுப்பு பெண்ணின் கையிலேயே இருக்கிறது. அவளுடைய எண்ணமெல்லாம் கணவனையும்,

Read More
ஜாக்கிரதையுள்ளவனும், நிர்விசாரியும்!

ஜாக்கிரதையுள்ளவன் தன் பொருட்களின் மேல் கவனமுள்ளவனாயிருக்கிறான். கண்ணும் கருத்துமாய் தனக்குள்ளவற்றை காத்துக் கொள்ளுகிறான். "ஜாக்கிரதையுள்ளவன்" என்ற சொல்லுக்கு எதிரான ஒரு சொல் "நிர்விசாரமுள்ளவன்" என்பதாகும். ஆமோஸ் தீர்க்கதரிசி, "சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களுக்கு ஐயோ!" (ஆமோஸ் 6:1) என்று சொல்லுகிறார்.

Read More
கவலையிலும் மகிழ்ச்சி!

கவலை ஒரு மனுஷனுடைய வாழ்க்கையை ஒடுக்கும் என்பதற்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும். ஒரு தத்துவ ஞானி, "கடவுள் எவ்வாறு சர்வ வல்லமையுள்ளவராக இருக்கிறாரோ, அப்படியே கவலை சர்வ அழிவுள்ளதாக இருக்கிறது" என்று சொன்னார்.

Read More
செழிக்கும்!

நீங்கள் ஆவிக்குரிய பிரகாரமாகவும், உலகப்பிரகாரமாகவும் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றால், உங்களுக்கு உதாரகுணம் அவசியம். கர்த்தர் உதாரகுணமுள்ளவர் அல்லவா? ஆகவே அவர் உதாரகுணமுள்ள ஆத்துமாக்களை செழிக்கப்பண்ணுகிறார்.

Read More
கர்த்தருக்குப் பயப்படுதல்!

இன்றைக்கு மனிதன் மனிதனுக்கு பயப்படுகிறான். ஆனால் அவன் தேவனுக்குப் பயப்படுதலோ அபூர்வமான ஒரு காரியமாகிவிட்டது. தங்கள் தீவினைக்கு உடனே தண்டனை வராததினாலே ஜனங்கள் மெத்தனமாகிவிட்டார்கள். "கடவுள்தானே, அவர் அன்புள்ளவர், இரக்கமுள்ளவர். பிறகு மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம்" என்று சொல்லி தெய்வீக பயமற்று

Read More
நீதிமானின் விருப்பம்!

வேதம் சொல்லுகிறது, "ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்" (1 கொரி. 6:11). நீங்களும் அவ்விதமாக நீதிமான் களாக்கப்பட்டிருப்பீர்களானால், உங்களுடைய விருப்பங்களும் நீதிமான்களின் விருப்பங்களாகவேயிருக்கும்.

Read More
நித்தமும் வாசற்படியில்!

கர்த்தர் உங்களோடுகூட பேச ஆயத்தமாயிருக்கிறார். நீங்கள் கேட்க ஆயத்தமாயும், தகுதியுள்ளவர்களுமாயிருக்கிறீர்களா? அநேகர் ஆலயத்திற்கு வருவார்கள். ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்க விருப்பப்படுவார்கள். "கர்த்தர் உங்களுக்குச் செழுமையை கட்டளையிடுகிறார்" என்று சொன்னால், "அல்லேலூயா" என்று சொல்லுவார்கள்.

Read More
வல்லமை தருகிறார்!

"ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது" (நீதி. 8:14).

ஒருமுறை தேவ ஊழியரான கேம்பல் மார்கன் என்பவர் மிகவும் வியாதிப்பட்டார். சரீர பெலவீனம் அவரை பாதித்தது. நித்தியத்திற்குள்ளாகச் செல்லவேண்டிய கடைசி நிமிடம்

Read More
வஸ்திரம் வேகாமல்!

"தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக் கொள்ளக்கூடுமோ? தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?" (நீதி. 6:27,28).

பரிசுத்த வாழ்க்கையைக் குறித்து நீங்கள் ஜாக்கிரதையுள்ளவர்களாயிருக்க வேண்டும். அசுத்தமான உறவுகள், சம்பாஷனைகள், கடிதத் தொடர்புகளெல்லாம், உங்கள் மடியிலே

Read More
வேதமே வெளிச்சம்!

"வேதமே வெளிச்சம்" என்று ஞானி திட்டமும் தெளிவுமாய் கூறுகிறார். "உம்முடைய வசனமே என் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமாய் இருக்கிறது" என்று தாவீது அழகாக அறிவுறுத்துகிறார். பாதை தெரியாத ஆட்டைப் போல நீங்கள் அலைந்து திரியும்போது, வேதம் உங்களுக்கு வெளிச்சம் தந்து கர்த்தருடைய பாதையிலே உங்களை வழி நடத்துகிறது.

Read More
தாயின் சிறப்பு!

"என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே" (நீதி. 1:8).

ஒரு மனுஷனுக்கு கர்த்தர் கொடுக்கிற ஆசீர்வாதங்களிலே மிக அருமையான ஆசீர்வாதம் தாயும், தகப்பனும்தான். தாயினுடைய அன்பும், தியாகமும், ஜெபமும் பிள்ளைகளுக்கு என்றென்றும் ஆசீர்வாதமாய் விளங்கும். பல பரிசுத்தவான்களுடைய வாழ்க்கையைக் குறித்து தியானித்துப் பாருங்கள். தாய்மார்கள் அவர்களை இளம் வயதிலேயே பக்தியிலும்,

Read More
கெம்பீரத்தோடே அறுப்பாய்!

"கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்" (சங். 126:5,6).

நீங்கள் கெம்பீரத்தோடே அறுங்கள். நல்ல அறுவடையை தேவன் கட்டளையிடுவார். கர்த்தருடைய தோட்டத்திலே பணிவிடைக்காரர்களாயிருப்பது உங்களுக்கு எத்தனை பெரிய பாக்கியம்! இம்மைக்குரிய அறுவடைகளுமுண்டு; நித்தியத்திற்குரிய அறுவடைகளுமுண்டு. தற்காலிகமான அறுவடைகளுமுண்டு; என்றென்றுமுள்ள அறுவடைகளுமுண்டு.

Read More
வழி தப்பின ஆடு!

"காணாமற்போன ஆட்டைப் போல வழி தப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்" (சங். 119:176).

ஒருமுறை ஒரு சகோதரனைக் குறித்து அறிமுகம் செய்யும்போது, "அவர் கூடு விட்டு கூடு பாய்கிறவர்" என்று சொன்னார்கள். நான் அந்த வார்த்தையை விக்கிரமாதித்தன் கதையில் தான் படித்திருக்கிறேன். அந்த வித்தையைக் கற்றவன் மனுஷனாயிருந்தாலும், அவன் அருகிலே ஒரு மான் செத்துக் கிடக்குமென்றால், இந்த ஆவி அந்த மானுக்குள் பிரவேசித்து மான் உயிர் பெற்று ஓடிவிடும். ஒரு பன்றி செத்துக் கிடந்தால் இந்த ஆவி அந்த பன்றிக்குள் புகுந்து பன்றியின் ரூபமெடுத்து ஓடும். அதற்கு கூடு விட்டு கூடு பாய்தல் என்று சொல்லுவார்கள்.

Read More
கால்களுக்குத் தீபம்!

"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங். 119:105).

கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலே விளக்கை ஏற்றுகிறார். நீங்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தரைத் தொழுதுகொள்ளும்போதும், கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று கர்த்தரை ஆராதிக்கும்போதும், அந்த தீபமானது பிரகாசமாய் பற்றிப் பிடித்து சுடர்விட்டு எரிகிறது. தாவீது தன் வாழ்க்கையின் அனுபவத்தைக் குறித்து எழுதும்போது, கர்த்தருடைய வசனமே தன் கால்களுக்குத் தீபமும் தன் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது (சங். 119:105) என்று குறிப்பிடுகிறார்.

Read More
அன்பின் பலிகள்!

"கர்த்தர் நம்மை பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்" (சங். 118:27).

"பலிபீடம்" என்பது, கொல்கொதா மேட்டிலுள்ள சிலுவைதான். அந்த கல்வாரி சிலுவையோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். பலிபீடத்தின் கொம்புகளில் உங்களை இணைத்து கட்டுகிற அந்த கயிறுதான் தெய்வீக அன்பு. "மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன்" (ஓசியா 11:4).

Read More
பெலவீனமே போ போ!

"அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை" (சங். 105:37).

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்தார்கள். கடினமான வேலையினாலும், கொடிய ஆளோட்டிகளின் அதிகாரத்தினாலும் தொந்து போனார்கள். ஆனால் கர்த்தரோ, அவர்கள் மனமடிவைக் கண்டு எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து புறப்படப்பண்ணி, கானானை நோக்கி வழிநடத்திக் கொண்டு வந்தார்.

Read More
பெருக்கமும், பெலனும்!

"அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப் பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்" (சங். 105:24).

கர்த்தர் உங்களைப் பலுகப்பண்ணுகிறவர், பலவான்களாக்குகிறவர். சத்துருக்களைப் பார்க்கிலும் நீங்கள் அதிக பலவான்களாக விளங்க வேண்டும் என்பதே அவருடைய பிரியமும், சித்தமுமாயிருக்கிறது. இன்றைக்கு உலகமெங்கும் சத்துருக்கள் பெருகியிருக்கிறார்கள். எதிர்ப்பும், போராட்டமும் எல்லா இடங்களிலும் வலுத்திருக்கின்றன. ஆனால், கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் கலங்கவேண்டியதில்லை. ‘சத்துருக்களைப் பார்க்கிலும் உங்களை பலவான்களாக்குவேன்’ என்று கர்த்தர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். ஆகவே பெலன்கொண்டு திடமனதாயிருங்கள்.

Read More
தியானம்!

"நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்" (சங். 104:34).

தியானிப்பது என்பது ஆவிக்குரிய தலைசிறந்த ஒரு பயிற்சியாகும். பக்தி முயற்சிகளில் இது ஒரு விசேஷமான பகுதி என்றே நான் சொல்லுவேன். தாவீது தன் அனுபவத்திலிருந்து, "நான் அவரை தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்" என்று எழுதுகிறார். தேவபிள்ளைகளே, தியான ஜீவியம் உங்களுக்கு மிக மிக இன்றியமையாததாகும். அந்த தியானம் உங்களுடைய சிந்தனையை செழிப்பாகவும், இளமையானதாகவும் மாற்றி வாழ்க்கையை வளப்படுத்துகிறது.

Read More
தேவதூதர்கள்!

"உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்" (சங். 91:11).

கர்த்தருடைய குடும்பம் பெரியது. கர்த்தருடைய குடும்பத்தில் பெரிய தேவதூதர்களுண்டு. கேருபீன்கள், சேராபீன்களுண்டு. ஆயிரம் பதினாயிரம் தேவதூதர்கள் பணிவிடை ஆவிகளாய் உங்களுக்கு உதவி செய்யும்படி காத்திருக்கிறார்கள்.

Read More