கர்த்தருடைய சமுகமும், பிரசன்னமும் ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் தேவை. இந்த உலகத்தில் அதுதான் மிகவும் விலையேறப் பெற்றதும் மிகவும் அருமையானதும், மேன்மையானதுமாயிருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தேவ பிரசன்னத்தை நீங்கள் இழந்துவிடவே கூடாது.
Read More"அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணக்கடவர்கள்" (சங். 149:3).
நீங்கள் "நடனமாடி" கர்த்தரைத் துதிக்கும்போது, கர்த்தருக்கும் மகிழ்ச்சி. உங்களுக்கும் ஆனந்தம். கர்த்தர் செய்த நன்மைகளை நினைக்கும்போது உங்களால் அமைதியாய் இருக்கவே முடியாது. கர்த்தருடைய பிரசன்னத்தை உணரும்போது உங்களால் களிகூராமலிருக்க முடியாது.
Read More"உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்" (யாத்.4:14).
நம்முடைய வீடுகளுக்கு அநேகர் வருகை தந்தாலும் ஒருசிலரைக் கண்டால் மட்டும் நம்முடைய இருதயம் மகிழ்ந்து களிகூருகிறது. மிகவும் முக மலர்ச்சியோடு அவர்களை உபசரிக்கிறோம். ஆனால், வேறு சிலர் வந்துவிட்டால் உள்ளத்தில் கலக்கம் ஏற்படுகிறது. ஐயோ, வீட்டிற்கு வருகிறார்களே, என்ன குழப்பத்தை ஏற்படுத்துவார்களோ, என்ன சண்டையை மூட்டி விட்டுச் செல்வார்களோ, அமைதியை கெடுத்து விடுவார்களோ என்றெல்லாம் கலங்குகிறோம்.
Read More"...தேவன் பூர்வ காலமுதல் என்னுடைய ராஜா" (சங். 74:12).
‘நீர் என்னுடைய ராஜா; என்னை ஆளுகிறவர்; என்னை பொறுப்பெடுத்திருக்கிறவர்; நீர் எனக்காக யாவையும் செய்து முடிக்கிறவர்’ என்று சொல்லி கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். தாவீது எத்தனை அன்போடு "பூர்வ காலமுதல் நீரே என்னுடைய ராஜா" என்று சொல்லி அகமகிழுகிறார் பாருங்கள்!
Read More"தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்" (சங்.68:1).
‘எழுந்தருளுவார்’ என்கிற வார்த்தையைச் சிந்தித்துப் பாருங்கள். கர்த்தர் உங்களுக்காக கிரியை செய்ய, உங்களுக்காக வழக்காட, உங்களுக்காக யுத்தம் செய்ய எழுந்தருளுவார்.
Read More"...என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்" (சங். 40: 2,3).
தாவீதின் உள்ளம் பரவசமான உள்ளம். தேவன் செய்த நன்மைகளையெல்லாம் எண்ணி துதிக்கிற உள்ளம். ‘பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்தார், என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தினார், என் அடிகளை உறுதிப்படுத்தினார்‘ என்றெல்லாம் சொல்லிவிட்டு முடிவாக, ‘தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்’ என்று சொல்லி மனம் மகிழுகிறார்.
Read More"...நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்" (சங். 32:8).
பல வேளைகளில் நீங்கள் பாதை தெரியாமல் திகைக்கிறீர்கள். வாழ்க்கையிலே எந்த வழியாக செல்லுவது என்று தெரியாமல் தடுமாறுகிறீர்கள். துக்கம் என்னும் காரிருள் சூழ்ந்து உங்களைத் தடுமாறப்பண்ணுகிறது. அந்த வேளைகளிலெல்லாம் கர்த்தர் உங்கள் அருகிலே வந்து "நீங்கள் நடக்க வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டுவேன்" என்று சொல்லுகிறார்.
Read More"நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்" (சங். 39:2).
பேச ஒரு காலமுண்டு. மவுனமாயிருக்க ஒருகாலமுண்டு என்று பிரசங்கி சொல்லுகிறார் (பிர.3:7). எப்போது மவுனமாயிருக்க வேண்டுமோ அப்பொழுது நீங்கள் மவுனமாயிருந்துதான் ஆகவேண்டும்.
Read More"...உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே" (சங். 84:3).
அடைக்கலான் குருவிக்கு ஒரு வீடு, தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்க ஒரு கூடு! கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்த சங்கீதக்காரன் ஆலயத்தின் ஒல்வொரு பகுதியாக பார்த்துவிட்டு திடீரென்று ஆலயத்திலுள்ள பீடங்களை நோக்கிப் பார்த்தார். அவருக்கு ஒரே ஆச்சரியம். அங்கே அடைக்கலான் குருவி கூடு கட்டியிருந்தது. தகைவிலான் குருவித் தன் குஞ்சுகளை வைத்திருந்தது.
Read More"கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்" (சங். 34:2).
நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு கர்த்தரைத் துதிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். இந்த உலகத்திலே உங்களைச் சூழ ஏராளமான சிறுமைப்பட்ட ஜனங்கள் இருக்கிறார்கள். சிறுமைப்பட்டவர்களென்றால் வெறும் ஏழைகள் மாத்திரம்தான் என்று நீங்கள் எண்ணி விடக்கூடாது.
Read More"கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்" (சங். 25:12).
கர்த்தருக்குப் பயந்து நடப்பதினால் வரும் ஆசீர்வாதங்களை வேதம் அடுக்கடுக்காய் கூறுகிறது. அவை எண்ணற்றவை மற்றும், நித்தியமானவை. அந்த ஆசீர்வாதங்கள் பரலோகம் வரையிலும் எட்டுகின்றன. சரி கர்த்தருக்குப் பயப்படும் பயம் உங்களில் எப்படி பிரதிபலிக்க வேண்டும்? இதோ, நான்கு கருத்துக்களை உங்களுடைய தியானத்திற்காக வைக்கிறேன்.
Read Moreகர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்" (சங். 23:1).
நம்முடைய தேவனுடைய பெயர் "யேகோவா" என்று அழைக்கப்படுகிறது. யேகோவா என்கிற பதத்திற்கு இருக்கிறவராகவே இருக்கிறேன் என்பது அர்த்தமாகும். கர்த்தர் யேகோவா என்ற பெயரோடுகூட இன்னும் பல பெயர்களால் அறியப்பட்டார். யேகோவாயீரே என்றால் ‘கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக் கொள்ளப்படும்’ என்று அர்த்தம். யேகோவா ஷாலோம் என்றால் ‘கர்த்தரின் சமாதானம்’ என்று அர்த்தம். யேகோவா நிசி என்றால் ‘கர்த்தர் என் ஜெயக்கொடியானவர்’ என்று அர்த்தம். அதைப்போல யேகோவா ரகா என்ற பதத்திற்கு ‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்’ என்பது அர்த்தமாகும்.
Read More"அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்" ( சங். 18:33).
மான்களின் கால்கள் வேகமாய் ஓடும் வல்லமைபெற்றவை. அதே நேரத்தில் மான் கால்கள் துள்ளிக் குதித்து மலைகளின் மேல் ஏறக்கூடியதாகவும் இருக்கின்றன. யாரும் ஏறி வரக்கூடாத உயர்ந்த குன்றுகளின் மேல் மான்கள் அழகாய் துள்ளிக் குதித்து ஏறி கெம்பீரமாக நிற்கும்.
Read More"குணசாலியான ஸ்திரீயைக் கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது" (நீதி. 31:10).
நீங்கள் குணசாலிகளாக ஜீவிக்க வேண்டுமென்பதே கர்த்தருடைய சித்தமும், பிரியமுமாயிருக்கிறது. குணசாலியான ஸ்திரீகள் குடும்பத்திற்கும், சபைக்கும், கர்த்தருடைய நாமத்திற்கும் மிகுந்த மகிமையைக் கொண்டு வருகிறார்கள். ஒருவேளை இதுவரையிலும் நீங்கள் குணசாலிகளாக இல்லாமலிருந்தால் கர்த்தர் உங்களை குணசாலிகளாக மாற்ற விரும்புகிறார். குடும்பத்திற்காக திறப்பில் நின்று ஜெபிப்பதும், வேதவாசிப்பும், தேவபக்தியும், கர்த்தருக்கு பயப்படுவதும், உங்களை குணசாலிகளாக மாற்றும்.
Read Moreஉங்களை யாராவது புகழும்போது ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் புகழ்ச்சியையே நாடி ஓடிக்கொண்டிருந்தால் அது முடிவில் கண்ணியாக வந்து சேரும். இன்று வஞ்சகமான புகழ்ச்சிகளும், முகஸ்துதிகளும் எங்கும் மலிந்து கிடக்கின்றன.
Read More" தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தை விட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்" (நீதி. 27:8).
Read Moreசரீர சோம்பலானாலும் சரி, ஆவிக்குரிய சோம்பலானாலும் சரி அதை வேதம் எதிர்க்கிறது. நீதிமொழிகளின் புத்தகத்தை வாசித்தால் அங்கே சோம்பலைக் குறித்து பல எச்சரிப்பின் வசனங்கள் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். சரீர சோம்பல் கடனைக் கொண்டு வரும்; ஆவிக்குரிய சோம்பலோ நரகத்தில் தள்ளி விடக்கூடும்.
Read Moreஇந்த நாட்களில் நற்செய்திகளைவிட துர்ச்செய்திகளைத்தான் அதிகமாக கேட்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் காலை செய்தித் தாளை திறந்து பாருங்கள். அங்கே விமானம் நொறுங்கி விழுந்து இருநூறு பேர் மரணம், கண்ணி வெடியினால் நூறுபேர் மரணம், பூமி அதிர்ச்சியினா
Read More"மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப் பண்ணும்" (நீதி. 17:22).
"ஔஷதம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? ஔஷதம் என்பது அருமருந்து. அது தலை சிறந்த தெய்வீக ஆரோக்கியத்தைத் தரும் பானம். இது எல்லா நோய்களையும் நீக்கி ஆரோக்கியத்தைக் கொண்டு வரும்.
Read More"மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்" (நீதி. 15:1).
கணவன் மனைவி உறவுக்கும், குடும்ப ஐக்கியத்திற்கும் ஒருவரோடொருவர் அன்போடு மனம் திறந்து பேசுவது மிகவும் அவசியம். வேதம் சொல்லும் ‘மெதுவான பிரதியுத்தரம்’ என்பது
Read More